முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஜங்ஷனில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் தலைமையில், மாநில துணைத்தலைவர் சுப.சோமு முன்னிலையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம், இனிப்பு வழங்கினர். பிறந்தநாள் விழாவில் கட்சியின் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், கள்ளத்தெரு குமார், ஜி எம்.ஜி.மகேந்திரன், வெல்லமண்டி பாலசுப்பிரமணியம், பஜார் மைதின், அண்ணா சிலை விக்டர், சோசியல் மீடியா அபு, பொறியாளர்கள் பிரிவு மாவட்ட தலைவர் சுதர்சன், வழக்கறிஞர் பிரிவு சிவகாமி, சுகன்யா, மகளிர் அணி அஞ்சு, செல்வி, பாலக்கரை மாரியப்பன், திம்மை செந்தில்குமார், முருகன், கலை பிரிவு ராஜீவ் காந்தி சண்முகம், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கம்பை பாரத், சுரேஷ், இஷாம், உறையூர் கோட்டத் தலைவர் காமில் அகமது, ஜிம் விக்கி, சிந்தை கௌதம் தன்ராஜ் சிவா, முருகன், பிரவீன், ஹரி, கிஷோர், விளையாட்டுத்துறை ஆனந்த், ஸ்ரீரங்கம் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Comments are closed.