பிரதமர் மோடி தமிழக வருகையை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம்…!
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் கடலுக்கு நடுவே ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாம்பன் பாலம் மற்றும் பல்வேறு திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று(06-04-2025) தொடங்கி வைத்தார். இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கலை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி கருப்பு பலூன்களை வானில் பறக்க விட்டனர். இதேபோல, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டோன்மெண்ட் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Comments are closed.