திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு: பயணியிடம் 6 பவுன் நகைகளை திருடிக்கொண்டு ஓடியவர் பிடிபட்டார்…!
திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் ரோடு மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 62). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் வந்து இறங்கினார். தஞ்சை பேருந்து நிறுத்தம் அருகில் பஸ்சிலிருந்து சந்திரசேகரன் இறங்கியபோது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர், அவர் பையில் வைத்திருந்த தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓடினார். உடனே திருடன்…திருடன்… என சந்திரசேகரன் கூச்சலிடவே அங்கு நின்று கொண்டு இருந்த சக பயணிகள் அந்த மர்ம ஆசாமியை விரட்டிச் சென்று பிடித்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் திருச்சி அம்மாமண்டபம் பகுதியை சேர்ந்த ஷாஜகான் (வயது 42)என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜகானை கைது செய்தனர். அவர் திருடிய 46 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.