சிறுகனூர் அருகே ஸ்ரீதேவிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது செல்லியம்மன் கோவில். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் பரம்பரை பூசாரியாக ஆனந்தன் பூஜை செய்து வருகிறார். இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் குத்தகை ஏதும் கொடுக்காமல் பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது .தற்போது செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளந்து ஏலம் விடும் முயற்சியில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் பூசாரி ஆனந்தன் தான் மற்றொரு தரப்பினருக்கு உதவுவதாக இன்னொரு தரப்பினர் நினைத்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஒரு பிரிவினர் செல்லியம்மன் கோயிலை கடந்த நான்கு நாட்களாக பூட்டி வைத்துள்ளனர். இதனால் பூஜைகள் செய்ய முடியாத நிலை நிலவுகிறது. இதுகுறித்து பூசாரி ஆனந்தன் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையும் காவல்துறையும் இரு தரப்பிரிடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்தி கோயிலை திறக்க வேண்டும் என்பதே அனைவரும் விருப்பமாகும்.