Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் சங்கு ஊதும் நூதன போராட்டம்: போலீசார்- கட்சியினர் தள்ளு- முள்ளு…!

திருச்சி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் பல இடங்களில் மந்தமான நிலையில் நடைபெற்று வருகின்றன.
பல இடங்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக்கி வருகின்றனர். மேலும், மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதால் அதனைக் குடிக்கும் மக்களுக்கு மஞ்சள் காமாலை, டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

இவ்வாறு மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாமல் மெத்தனமாக செயல்படும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருச்சி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமையில் கட்சியினர் சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சங்கினை பறித்து பாஜகவினரை அப்புறப்படுத்த முற்பட்டதால் போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்