திருச்சியில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: மங்களப் பொருட்களை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…!
தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(14-02-2026) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கள பொருட்கள் மற்றும் ஆயிரம் நாட்கள் குழந்தைகளை வளர்க்கும் கையேடும் வழங்கப்பட்டது.

Comments are closed.