திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகார் மனுவில், தனக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வருவதாகவும், அவர்கள்தான் தனது வீட்டை சூறையாடியதாகவும் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திமுக பிரமுகரான சுரேஷ்குமார், தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார் இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.