கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் சி.ஏ.எஸ்.எப்.காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் விமான நிலையத்திற்குள் செல்கின்ற பயணிகளையும், விமானத்திலிருந்து வருகின்ற பயணிகளையும் சோதனை செய்து அனுப்புவார்கள். அந்தவகையில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஏ.எஸ்.எப் காவலர் சந்திரசேகர் விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் துப்பாக்கியால் தாடை பகுதியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரது உடலை விமான நிலைய அதிகாரிகள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விமானப்படை அதிகாரிகள், சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கோவை பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 946
Comments are closed.