Rock Fort Times
Online News

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 57 ரூபாய் குறைப்பு….!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலை நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு மார்ச் மாதம் மீண்டும் விலை உயர்ந்தது. பின்னர் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் விலை குறைந்தது. இந்நிலையில், ஜூலை 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நேற்று ரூ.1,881 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.57.50 குறைக்கப்பட்டு ரூ.1823.50ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதேநேரத்தில் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.868.50க்கு விற்பனையாகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்