எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாதம் தோறும் சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகிறது. அதன்படி இம்மாதத்திற்கான புதிய விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு இன்று ( 01.11.2023 ) அதிகாலை அறிவித்தது. அதில், தொடர்ந்து 8வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை இம்மாதமும் ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அக்டோபர் மாதம் 1-ந் தேதி வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்டு, ரூ 1,695ல் இருந்து ரூ1,898க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாதம் இன்று முதல் சிலிண்டர் விலை ரூ.101.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டு விலை சிலிண்டர் விலை இன்று முதல் ரூ1,999.50 ஆக உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வால் ஹோட்டல், தேநீர் கடைகளிலும் உணவுப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரக் கூடும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.