இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு நடிகராக அறிமுகமானவர் கவுண்டமணி. பின்னர் காமெடி காட்சிகளில் கலக்கி வந்தார். நடிகர் செந்திலுடன் கவுண்டமணி இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன. ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என அனைத்து ஹீரோக்களுடனும் இணைந்து காமெடி செய்துள்ளார். 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கோலோச்சி வரும் கவுண்டமணிக்கு தற்போது வயது 85. தற்போதும் நடித்து வருகிறார். கவுண்டமணியின் மனைவி சாந்தி( 67). சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று(மே 5) சென்னையில் காலமானார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சாந்தியின் உடல் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு இன்று மாலை அல்லது நாளை காலை நடக்கும் என தெரிகிறது. கவுண்டமணி மனைவி மறைவு தமிழ் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் தான் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார். நேற்றைய தினம் நடிகை பெருமாயி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.