திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எம்.ஆர்.பாளையம் சனமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகன் ஜேம்ஸ் ஜெபகரன் (வயது 19). இவர் திருச்சி கள்ளிக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
வழக்கம்போல, இன்று ( 26.10.2023 ) ஜேம்ஸ் ஜெபகரன் கல்லூரிக்கு சென்று விட்டு அம்மாபேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கி திருச்சி- திண்டுக்கல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று கல்லூரி மாணவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜேம்ஸ் ஜெபகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த இனாம்குளத்தூர் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காரை ஓட்டி வந்த மணப்பாறை பெத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.