கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்…!
கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு (நவ.,02) தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக, 3 பேர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளதோடு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, தமிழக பாஜ சார்பில் இன்று (நவ., 03) மாலை கோவையிலும், நாளை மறுதினம் (நவ.,05) பிற மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.