திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பச்சைமலை சோழமாத்தி பகுதியில் வசிப்பவர் செந்தில். இவரது மகள் ஜனனி (வயது 18). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹாலில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது தாத்தா, ஜனனி தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார், ஜனனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.