Rock Fort Times
Online News

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…!

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை 30 நாட்களில் பரிசீலிக்க வேண்டும், மனுக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதால் பொது நல வழக்குகள் அதிகரித்துள்ளது என்று நீதிபதி கூறினார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் விசாரணையை துவங்கும் முன் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன்வைத்தார். அதில் அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அரசாணையின்படி 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என சுட்டிக்காட்டினார். அரசுக்கு மனு அளிக்கப்பட்ட 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் உறுதி அளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்