திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லுாா் வட்டத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் வேலா மனநல காப்பகம் , சங்கராலயா மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இடைநில்லா காப்பகம் மற்றும் 14 வயதிற்கு மேற்பட்ட அறிவுசாா் குறையுடையோருக்கான விடுதி வசதி மற்றும் தொழிற்பயிற்சியுடன் கூடிய பெண்களுக்கான இல்லத்தை மாவட்ட ஆட்சித்தலைவா் பிரதீப்குமாா் இன்று (11.04.2023 ) நோில் ஆய்வு செய்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜீத்குமாா், இலால்குடி வருவாய் கோட்டாச்சியா் வைத்தியநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் ஆகியோா் உடன் இருந்தனர்.