சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தனி அறை – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…!
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் கே.என்.நேரு. அமைச்சர் பதவி மட்டுமின்றி கட்சி பணியிலும் இவரது அயராத உழைப்பை கண்டு வியந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கே.என். நேருவுக்கு கட்சியில் திமுக முதன்மை செயலாளர் பதவியையும் வழங்கினார். இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதன்மைச் செயலாளருக்கு என தனி அறையையும் ஒதுக்கி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த அறையை திறந்து வைத்ததோடு நாற்காலியில் அவரை அமர வைத்து வாழ்த்தினார். இதனைப் பார்த்து மனம் நெகிழ்ந்த அமைச்சர் கே.என்.நேரு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டதோடு சால்வை கொடுத்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின் போது கழகப் பொதுச் செயலாளர், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர், வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கழக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் ராஜா, பூச்சி எஸ். முருகன், கழகத் துணை அமைப்புச் செயலாளர்கள்
ப. தாயகம் கவி, எம்.எல்.ஏ. எஸ். ஆஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.
Comments are closed.