தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரிமா -70 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பில், பட்டிமன்றம் மற்றும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் – கழக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பட்டிமன்றத்தை துவக்கி வைத்து பேசினர். திருச்சி தேவர் ஹாலில், திருச்சி கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிட மாடல் ஆட்சியில் பெரிதும் மிளிர்வது,
1. ஒளிரும் தன்மானமே,
2. மலரும் மக்கள் பணியே என்ற தலைப்பில்நடந்த பட்டிமன்றத்தில் பேச்சாளர்கள் பேசினர். பட்டிமன்ற நடுவராக கழக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ. லியோனி பேசினார்.
நிகழ்வில் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தியாகராஜன் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகர மேயர் மு.அன்பழகன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன் சபியுல்லா வன்னைஅர ங்கநாதன் , பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமேகலை ராஜேஸ்வரன் மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன் லீலாவேலு, மூக்கன் நகரத் துணைச் செயலாளர்கள் பொன்செல்லையா நூர்கான் தமிழ்ச்செல்வன் சரோஜினி சந்திரமோகன் பகுதி கழகச்செயலாளர் பாபு மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, மாநகர சேர்மன்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், மாவட்ட கழக பேச்சாளர்கள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
1 Comment
Leave A Reply

**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.