மழையின் காரணமாக விடுமுறை விடப்பட்ட பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தக் கூடாது: பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்கிறது. பலத்த மழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்தநிலையில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கி றேன். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால், கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Comments are closed.