Rock Fort Times
Online News

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 59லட்சம் மோசடி – ஒருவா் கைது…

திருச்சி மாவட்டம், குளவாய்பட்டியைச் சேர்ந்தவர் தங்கையன். இவர், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது, நாகர்கோவில் பள்ளிவிடையை சேர்ந்த சசிக்குமார், கன்னியாகுமரி அருகேயுள்ள தாளக்குடியைச் சேர்ந்த சிதம்பரதானு ஆகியோர் லண்டனில் வேலை வாங்கித்தருவதாக கூறி விளம்பரம் செய்திருந்தனர். இதைகண்ட தங்கையன் வெளிநாடு செல்ல அவர்களிடம் தொகையை செலுத்தியுள்ளார். மேலும் தனது, உறவினர்கள் மற்றும் அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 31 பேரிடம் ரூ. 59.73 லட்சத்தை வசூல் செய்து அவர்களுக்கு வங்கி பணப் பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு குறிப்பிட்டபடி லண்டனில் அவர்கள் வேலை வாங்கித்தரவில்லை. கொடுத்த தொகை மற்றும் பயண ஆவணங்களையும் திருப்பித் தராமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிதம்பர தானுவை கைது செய்தனர். சசிக்குமாரை தேடிவருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்