திருச்சி – புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயுள் தண்டனை கைதிகள், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 2000 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள, மூன்றாவது பிளாக்கில் மருத்துவமனையும் உள்ளது. அங்கு ஜெயில் அதிகாரி சண்முகசுந்தரம் ரோந்து சென்ற போது கைதிகளிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது குறித்து சண்முகசுந்தரம் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் திருச்சி துவாக்குடியை சேர்ந்த சாந்தகுமார், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த அருண்குமார், ஸ்ரீரங்கம் கீழ கொண்டயம் பேட்டையை சேர்ந்த குருமூர்த்தி ஆகிய மூன்று கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 947
Comments are closed.