Rock Fort Times
Online News

கல்வி நிறுவனங்களில் சேர முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு வாய்ப்பு…!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது குழந்தைகளை கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்கான சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்று பெறுவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 2023-24-ம் கல்வியாண்டிற்கு தங்களது குழந்தைகளை கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்கான சார்ந்தோர் சான்றை ஆன்-லைன் மூலம் பெறலாம். மேலும், முன்னாள் படைவீரர் அலுவலகத்தை உரிய ஆவணங்களுடன் அணுகி விண்ணப்பித்து சான்றிதழ் பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை 0431- 2960579 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்