வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்”…* திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களது வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில், சட்டமன்ற தொகுதிகளில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர். அந்தவகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இத்திட்டத்தை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்து திருச்சி, கல்லுக்குழி, செங்குளம் காலனி பகுதிகளில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பதிவாளர், செயலாட்சியர் அறிவழகன், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.