Rock Fort Times
Online News

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி…

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி ஆன்மீக குருவாக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார். கடந்த ஓராண்டாகவே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. சில மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5.45 மணி அளவில் பங்காரு அடிகளாரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 82. பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று ( 20.10.2023 ) மாலை நடக்கிறது. பங்காரு அடிகளார் மறைவு செய்தி கேட்டு தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூர் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

பங்காரு அடிகளாா் மறைவு செய்தி அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சோி கவா்னா் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை மற்றும் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் மேல்மருவத்தூரில் உள்ள பங்காரு அடிகளார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் பாமக நிறுவனத் தலைவா் ராமதாஸ், முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்