இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கத்திற்கான இலச்சினை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்…!
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (01.02.2025) சிவகிரி மடம் மற்றும் சிவகிரி ஆசிரமம் சார்பில் இங்கிலாந்து நாட்டில் மே 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள “ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம்” நிகழ்ச்சிக்கான இலச்சினையை வெளியிட்டார். இந்நிகழ்வின்போது, சிவகிரி மடத்தின் சர்வதேச அமைப்புச் செயலாளர் சுவாமி வீரேஸ்வரானந்தா, இங்கிலாந்து நாட்டின் சிவகிரி ஆசிரமத்தின் தலைவர் பைஜு பாலக்கல், செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் கணேசன் சிவன், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
Comments are closed.