Rock Fort Times
Online News

திருச்சி பேராசிரியர் எழுதிய “கலைஞரின் இதயம்” நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்…!

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் பொ.இரமேஷ். முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதியின் இலக்கியம் மீது தீராத பற்று கொண்டவர். கலைஞரின் இலக்கியம், நூல்கள், பேச்சு போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகவும், மேடைப் பேச்சாளராகவும் மாறினார். மேடைகளில் கலைஞரின் வசனத்தை பேசி அனைவரின் பாராட்டை பெற்றார். கடந்த 10 ஆண்டுகளாக தனியார் கல்லூரிகளில் பணியாற்றிய இவருக்கு 2009 ஆம் ஆண்டு அரசு கல்லுாாியில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. அதன்படி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்த இவர் திறம்பட பணியாற்றி பேராசிரியராக உயர்ந்தார். பின்னர் அங்கிருந்து திருச்சி தந்தை பெரியார் ஈவேரா கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தன்னால் மிகவும் நேசிக்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் உயிரிழந்ததும் நேராக சென்னைக்குச் சென்று அவரது இறுதிச்சடங்கு முடியும் வரை அங்கிருந்துவிட்டு சோகத்துடன் திருச்சி வந்தார். அதனை மையப்படுத்தி “கலைஞரின் இதயம்” என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகத்தை செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அமைச்சா் கே.என்.நேரு தலைமையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில், கலைஞரின் தலைப்பகுதி வடக்கு பார்த்த வகையில் இருந்தது. எந்த மதத்திலும் இவ்வாறு வடக்கு பாா்த்த நிலையில் வைக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் அண்ணாவின் மீது பெரும் பற்று கொண்ட கலைஞா், தான் இறந்ததும் மொினா கடற்கரையில் அண்ணாவின் சமாதிக்கு அருகில் என்னை வைக்க வேண்டும் என்று இரங்கட்பா எழுதியிருந்தாா். கலைஞரின் விருப்பப்படி அண்ணாவின் சமாதி அருகே கலைஞாின் தலை வைக்கப்பட்டுள்ளதாக மைய கருத்தாக தொிவித்துள்ளாா். இவா், இதற்கு முன்பு இன்றைய சாதனையாளா் வாிசையில், ஏ.சமுதாயமே, மலைக்கோட்டை மாமனிதா்கள், தமிழா் வாழ்வியல் மரபுகள் ஆகிய நுால்களையும் எழுதியுள்ளாா். இவரது மனைவி ஷோபனா தேசிய கல்லுாாியில் உதவி பேராசிாியராக பணியாற்றி வருகிறாா்.இவருக்கு சூாியா ரோஷன் என்ற மகனும், பூஜா ரோஷினி என்கிற மகளும் உள்ளனா். மகன் சென்னையிலுள்ள குருநாநக் கல்லுாாியில் முதலாம் ஆண்டும், மகள் திருச்சி கேம்பியன் பள்ளியில் 9ம் வகுப்பும் படித்து வருகின்றனா். நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட போது காவியா சண்முக சுந்தா், கல்வியியல் பல்கலைக்கழக‌ ஆட்சிக்குழு‌ உறுப்பினர் முனைவர் நடேசன் மற்றும் பேராசிரியரின் குடும்பத்தார்‌ உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்