திருச்சி, கே.கே.நகரில் கட்டப்பட்ட நூலக கட்டிடம்- காணொளி மூலம் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திருச்சி கே.கே.நகர், அய்யப்ப நகரில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி மற்றும் பலர் உடன் இருந்தனர். திருச்சி அய்யப்ப நகரில் திறக்கப்பட்ட நூலக கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார். இந்நிகழ்வில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், மண்டல குழுத் தலைவர் மு.மதிவாணன், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார், 63வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொற்கொடி மற்றும் அரசு அலுவலர்கள், வாசகர் வட்டத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.