Rock Fort Times
Online News

திருவாரூா் நவீன நெல் சேமிப்பு மையத்தில் முதலமைச்சா் ஆய்வு.

திருவாரூா் நவீன நெல் சேமிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களைச் சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக அதிக அளவில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.அந்த வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 105.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவுடன்அமைக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. அவற்றில் திருவாரூர் கிடங்கு வளாகத்தில் 2.35 கோடி ரூபாய் செலவில் 4250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்தினை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நெல்மணிகளை இயற்கைப் பேரிடர் மற்றும் மழைப் பொழிவுகளிலிருந்து பாதுகாப்பாக கிடங்குகளில் சேமித்து வைத்திட வேண்டும் என்றும், நெல்மணிகளில் ஈரப்பதம் ஏற்படாமல் நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இச்சேமிப்பு நிலையத்தில் தற்போது 1500 மெட்ரிக் டன் நெல் சேமிக்கப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்