இந்தியாவின் நம்பர்- 1 செஸ் வீரர் ஆகியுள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் (லைவ் ரேட்டிங்) இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை அவர் முந்தியதன் மூலம் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், FIDE செஸ் உலக தரவரிசை பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து , சாதனை படைத்துள்ள கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு பாராட்டுக்கள். உங்களது உறுதியும், திறமையும் செஸ் விளையாட்டின் மிக உயர்ந்த படி நிலைக்கு உங்களை உயர்த்தி உலக அளவில் அதிக புள்ளிகளை பெற்றிருக்கும் இந்திய வீரராக உங்களை நிலைநிறுத்தி உள்ளது. உங்களது சாதனை உலகம் எங்கும் உள்ள இளம் திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும், நமது தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.