முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாவட்ட பொறியாளர் அணி சார்பாக நடைபெற்ற மாபெரும் இறகு பந்து இரட்டையர் தொடர் போட்டி மன்னார்புரத்தில் நடைபெற்றது. 45 வது வட்ட திமுக செயலாளர் முருகானந்தம்,59 வது வட்ட திமுக செயலாளர் என்.ஜே. கணேசமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.பகுதிச் செயலாளர் எம்.தர்மராஜ்,பகுதி செயலாளர் ஜி.மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் அணி இன்ஜினியர் தென்னரசு வரவேற்றார். ஐகான்ஸ் ஐஏஎஸ் அகாடமி மேலாண்மை இயக்குனர் அல்லிராணி, தொழிலதிபர் வீரராக்கப்பன்,இன்ஜினியர் வி.சிவகுமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதக்கங்கள் அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாநகர கழக செயலாளர் மதிவாணன் வாழ்த்தி பேசினார் .விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை நன்கொடையாளர்கள் வழங்கினர் .அதன்படி ஆண்கள் பி லெவெல் இரட்டையர் சீனியர் பிரிவில் முதல் பரிசான 15 ஆயிரத்தை பாரத் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியர் எம்.நூர் முகமது, இரண்டாவது பரிசான பத்தாயிரம் ரூபாயை CEAT முன்னாள் தலைவர் இன்ஜினியர் எஸ்.சோமசுந்தரம், மூன்றாவது பரிசான 7 ஆயிரம் ரூபாயை CEAT தலைவர் இன்ஜினியர் எஸ்.கார்த்திக், நான்காவது பரிசாக 7000 ரூபாயை அரசு ஒப்பந்ததாரர் இன்ஜினியர் சி.பட்டாபிராமன் ஆகியோர் விளையாட்டு கமிட்டி குழுவிடம் வழங்கியிருந்தனர். அதேபோன்று 35 வயதிற்கு மேலான ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பத்தாயிரத்தை ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கா பில்டர்ஸ் மற்றும் டெவலப்பர்ஸ் இன்ஜினியர் ஆர்.நாராயணன், இரண்டாம் பரிசான 7000 ரூபாயை CRIC மாவட்ட தலைவர்கள் இன்ஜினியர் முருகானந்தன் ,இன்ஜினியர் ஜெயராம் ஆகியோரும் மூன்றாம் பரிசான ஐந்தாயிரம் ரூபாயை பொன்மலை பாபு கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியர் பாபு நான்காம் பரிசான ஐந்தாயிரம் ரூபாயை சோபிஸ் கார்னர் கூரைக்கடை பிரியாணி தொழிலதிபர் டி.சந்திரசேகர் ஆகியோரும் கொடையாளர்களாக செயல்பட்டனர். அதேபோன்று இருபது வயதிற்கு மேலான பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் பரிசான 7500 யை சென்னை தொழிலதிபர் இன்ஜினியர் லோகேஷ், இரண்டாம் பரிசான ஐந்தாயிரம் ரூபாயை திருச்சி சக்ரா அசோசியேட்ஸ் இன்ஜினியர் பி.வசந்தகுமார், மூன்றாம் பரிசான மூவாயிரம் ரூபாயை எடமலைப்பட்டி புதூர் ஆர்டிஸ்டிக் டிசைன் ஃபர்ம் எஸ்.பரமேஸ்வரி மற்றும் நான்காவது பரிசான மூவாயிரம் ரூபாயை லாவண்யா தென்னரசு ஆகியோரும் வழங்கினர். அதேபோன்று 19 வயதுக்குட்பட்ட ஜூனியர் கேர்ள்ஸ் இரட்டையர் பிரிவில் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை மட்டும் CRIC மண்டல ஒருங்கிணைப்பாளர் இன்ஜினியர் பி.என்.கதிரவன் வழங்கினார். விளையாட்டு வீரர்களுக்கு உணவு மற்றும் பழரசம்,தேநீர் வசதிகளை திருச்சி ஐயா ப்ளை ஆஷ் பிரிக்ஸ் தலைவர் இன்ஜினியர் சதாசிவம், திருச்சி வி.எம் ப்ளை பிரிக்ஸ் பொருளாளர் ஜோசப், திருச்சி ஜே.ஜே.எம் பிரிக்ஸ் அண்ட் ட்ரான்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் இணைச் செயலாளர் ஜோன்ஸ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பதக்கம் கோப்பை ஆகியவற்றை பெரம்பலூர் அரசு ஒப்பந்ததாரர் இன்ஜினியர் சிவக்குமார் ,பெரம்பலூர் பில்டர் ராஜாராம் ஆகியோர் அளித்தனர். இதில் ஏராளமான விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.
