லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மருத்துவமனை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. சென்னை கொளத்தூர் கபாலீசுவரர் கலைக்கல்லூரி விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. மேலும் கோவை, திருப்பூருக்கு நாளை செல்ல உள்ள நிலையில் வழக்கமான உடல் பரிசோதனை என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல்-அமைச்சரை 2 நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதல்-அமைச்சரின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் தந்தையை பார்ப்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்து முதல்வரிடம் நலம் விசாரித்ததோடு, மருத்துவர்களிடம் மருத்துவ பரிசோதனை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
Comments are closed.