திருச்சி–பாலக்காடு மற்றும் பிலாஸ்பூர்–எர்ணாகுளம் ரெயில்களின் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஊத்துக்குளி – திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக குறிப்பிட்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி–பாலக்காடு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16843) நாளை (வெள்ளிக்கிழமை) 25 மற்றும் 27ம் தேதிகளில் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்ததும், ஊத்துக்குளியில் இருந்து பாலக்காடுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். மேலும், பிலாஸ்பூர்–எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22815) வருகிற 26ம் தேதி பிலாஸ்பூரில் இருந்து புறப்பட்டு, 27ம் தேதி சேலம் – கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே வசதியான இடத்தில் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.