Rock Fort Times
Online News

சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் சேவையில் மாற்றம்…

சென்னை-குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மற்றும் 22-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை ரெயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல்-பாலக்காடுக்கு இன்று ( 13.10.2023 ) முதல் 29-ந் தேதி வரை இயக்கப்படும் பாலக்காடு விரைவு ரெயில் (22651), பாலக்காடு டவுன்-பாலக்காடு சந்திப்பு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது. பாலக்காடு-சென்னை சென்ட்ரலுக்கு இன்று ( 13.10.2023 ) முதல் 30-ந் தேதி வரை புறப்பட வேண்டிய விரைவு ரெயில் (22652), பாலக்காடு சந்திப்பு-பாலக்காடு டவுன் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்