Rock Fort Times
Online News

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு-ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு…!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மத்திய அமைச்சரவையில் மோடி உள்பட 72 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தநிலையில், வாரிசு அரசியல் பற்றி விமர்சித்த பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி எம்பி குற்றஞ் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“போராட்டம், சேவை, தியாகம்தான் எங்கள் மரபு என்று சொல்வோர் வாரிசுகளுக்கு பதவி கொடுத்துள்ளனர். அவரின் பேச்சுக்கும், செயல்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

1. எச்.டி. குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மகன்

2. ஜெய்ந்த் சவுத்ரி, முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் மகன்

3. ராம்நாத் தாக்குர், முன்னாள் பீகார் முதல்வர் கர்பூரி தாக்குர் மகன்

4. ராவ் இந்திர்ஜித் சிங், முன்னாள் ஹரியாணா முதல்வர் ராவ் பிரேந்திர சிங் மகன்

5. ராவ்நீத்சிங் பிட்டு, முன்னாள் பஞ்சாப் முதல்வர் பீண்ட் சிங் பேரன்

6. சிரஜ் பஸ்வான், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மகன்

7. ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியாவின் மகன்

8. ராம் மோகன் நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் யெரன் நாயுடு மகன்

9. பியூஸ் கோயல், முன்னாள் மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் மகன்

10. தர்மேந்திர பிரதான், முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதான் மகன்

11. ஜெ.பி.நட்டா, முன்னாள் ம.பி. அமைச்சர் ஜெயஸ்ரீ பானர்ஜி மருமகன்

12. ஜிதின் பிரசாதா, முன்னாள் எம்பி ஜித்தேந்திர பிரசாத் மகன்

13. கீர்த்தி வர்தன் சிங், முன்னாள் உபி அமைச்சர் மஹாராஜ் ஆனந்த் சிங் மகன்

14. அனுப்ரியா படேல், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் சோனேலால் படேல் மகள்

15. கிரண் ரிஜிஜு, முன்னாள் அருணாச்சல் பேரவைத் தலைவர் ரின்சின் காருவின் மகன்

16. ரக்ஷா காட்ஸே, முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் காட்சேவின் மருமகள்

17. கமலேஷ் பஸ்வான், முன்னாள் எம்பி வேட்பாளர் ஓம் பிரகாஷ் பஸ்வான் மகன்

18. சாந்தனு தாக்குர், முன்னாள் மேற்கு வங்க அமைச்சர் மஞ்சுள் கிருஷ்ணா தாக்குர் மகன்

19. விரேந்திர குமார், முன்னாள் மபி அமைச்சர் கௌரிசங்கர் சகோதரர்

20. அன்னபூர்ணா தேவி, முன்னாள் பீகார் எம்எல்ஏ ரமேஷ் பிரசாத் யாதவ் மனைவி.

இவ்வாறு 20 வாரிசுகளின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்