தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணியரசன்( வயது 50). இவர் காஞ்சிபுரத்திலிருந்து பஸ்ஸில் திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார். பஸ்ஸை விட்டு இறங்கியதும் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம மனிதர்கள் இவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு, மின்னல் வேகத்தில் ஆட்டோவில் தப்பி சென்றனர். இதுகுறித்து மணியரசன் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பெயரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குப்பதிந்து, திருச்சி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்கிற கோழிபாலு, சுரேஷ் என்கிற கோழி சுரேஷ் ஆகிய இரண்டு பேரை மடக்கிப் பிடித்தனர். இதேபோல் திருச்சி அண்ணா ஸ்டேடியம் காஜாமலை விடுதியில் படித்து வரும் எம்.ஸ்.சி முதலாம் ஆண்டு மாணவர் ஷேக் அலாவுதீனிடம் இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்து சென்று விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கே.கே.நகர் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.