Rock Fort Times
Online News

திருச்சியைச் சேர்ந்த சமூக சேவகருக்கு பாராட்டு சான்றிதழ்- மேயர் அன்பழகன் வழங்கினார்…!

திருச்சி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கடந்த  15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருபவர் பிளட் ஷாம். இலவச ரத்த தானம், ஆதரவற்றவர்களுக்கு அமர அடக்கம், புற்றுநோய் விழிப்புணர்வு, படுக்கை நோயாளிகளை பராமரித்தல், இலவச மருத்துவ முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கு
நல உதவி, திருநங்கை மற்றும் நம்பியர்களுக்கான மறுவாழ்வு போன்ற சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது சமூக சேவை பணிகளை பாராட்டி 78-வது சுதந்திர தின நன்னாளில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அப்போது மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்