Rock Fort Times
Online News

திருச்சியில் மத்திய தொழிற்சங்கத்தினர் மறியல்- 1,000 பேர் கைது…!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்துகள், இயந்திரங்கள், விவசாய இடுபொருட்கள் மீதான ஜிஎஸ்டி ஐ நீக்க வேண்டும்.
பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ. 26 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும். வாகன ஓட்டுனர்களை பாதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். உரம், பூச்சிமருந்து, மோட்டாருக்கு பயன்படும் மின்சாரத்திற்கு மானியத்தை அதிகரித்து, விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு செலவை காட்டிலும் கூடுதலாக 50 சதவிகிதம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 100 நாள் திட்டத்தை 200 நாளாக்கி தினக்கூலி ரூ. 600 வழங்க வேண்டும். நகர்ப்புறத்திற்கும் இத்திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்.

 

மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 ஐ திரும்பப் பெற வேண்டும். முன்பணம் செலுத்தி மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதை கைவிட வேண்டும்.பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். பழையை ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் இன்று(16-02-2024) வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தொமுச ஜோசப் மென்ஷன், குணசேகரன், எத்திராஜ், சி ஐ டி யு ரெங்கராஜன், ஏடிசி சுரேஷ் நடராஜன், சிவா, ஐ.ன்.டி.யு.சி வெங்கட் நாராயணன் ஏஐசிடியூ ஞான தேசிகன், எஸ் எம் எஸ் ஜான்சன் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்