சென்னை-தமிழக காவல் துறையின் உயர் பயிற்சியகத்தை, நாட்டின் சிறந்த பயிற்சி மையமாக தேர்வு செய்து, மத்திய உள்துறை அமைச்சகம், சுழற்கோப்பை வழங்கி உள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், ஆண்டு தோறும், நாட்டில் சிறந்த பயிற்சி கட்டமைப்பு உடைய, எஸ்.ஐகளுக்கான பயிற்சி மையத்தை தேர்வு செய்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு, 2022ம் ஆண்டு நவம்பர் 23 ம் தேதிசென்னை வண்டலுார் அருகே உள்ள, தமிழக காவல் துறையின் உயர் பயிற்சியகத்தை ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து, 2022ம் ஆண்டிற்கான நாட்டிலேயே எஸ்.ஐகளுக்கான சிறந்த பயிற்சி மையமாக, தமிழக காவல் துறையின் உயர் பயிற்சியகத்தை தேர்வு செய்தது. அதற்கென சுழற்கோப்பையையும் வழங்கி உள்ளது. இப்பயிற்சி மையத்தின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் விதமாக, 20 லட்சம் ரூபாய் உதவி மானியமும் வழங்க உள்ளது என டி.ஜி.பி., அலுவலகம் அறிவித்துள்ளது.