பண்டிகை காலத்தை முன்னிட்டு தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.7,268 கோடி நிதி விடுவிப்பு – மத்திய பிரதேசத்திற்கு தாராளம்…!
பண்டிகை காலத்தை முன்னிட்டு, மாநிலங்களுக்கு வரி பகிர்வுக்காக ரூ.1.78 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்குகிறது. வரி வருவாயில் கிடைக்கும் தொகையை, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பகிர்ந்து வழங்குகிறது. அதன்படி தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்களுக்கு மத்திய அரநிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு. ரூ.7,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதலாக ஒரு மாத தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதாவது கூடுதல்
தவணையாக முன்கூட்டியே ரூ.89,086.50 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், அவற்றின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த செலவினங்களுக்கு நிதியளிக்கும் வகையிலும் இவ்வாறு ஒரு மாத தவணையை முன்கூட்டியே விடுவித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
28 மாநிலங்களுக்கும் ஓதுக்கப்பட்ட நிதி விவரம் வருமாறு:-
தமிழ்நாடு – ரூ.7,268 கோடி
ஆந்திரா – ரூ.7,211 கோடி
அருணாச்சல் பிரதேசம் – ரூ. 3,131 கோடி
அசாம் – ரூ. 5.573 கோடி
பீகார் – ரூ. 17,921 கோடி
சத்தீஸ்கர் – ரூ. 6,070 கோடி
கோவா – ரூ. 688 கோடி
குஜராத்-6,197 கோடி
ஹரியானா-1,947 கோடி
இமாசல பிரதேசம்-1,479 கோடி
ஜார்க்கண்ட்-5, 892 கோடி
கர்நாடகா-6,498 கோடி
கேரளா-3,430 கோடி
மத்திய பிரதேசம் – ரூ.13,987 கோடி
மராட்டியம் – ரூ.11,255 கோடி
மணிப்பூர் – ரூ.1,276 கோடி
மேகாலயா – ரூ.1,367 கோடி
மிசோரம் – ரூ.891 கோடி
நாகாலாந்து – ரூ.1,014 கோடி
ஒடிசா – ரூ. 8,068 கோடி
பஞ்சாப் – ரூ. 3,220 கோடி
ராஜஸ்தான் – ரூ. 10,737 கோடி
சிக்கிம் – ரூ. 691 கோடி
தெலுங்கானா – ரூ. 3,745 கோடி
திரிபுரா – ரூ. 1,261 கோடி
உத்தரப்பிரதேசம் – ரூ. 31,962 கோடி
உத்தரகாண்ட் – ரூ. 1,992 கோடி
மேற்கு வங்காளம் – ரூ. 13,404 கோடி.
Comments are closed.