வங்கக்கடலில் உருவான ஃபென்ஜல் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜல் புயலால் பாதிக்கப்பட்ட மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம் பகுதிகளை திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ள பாதிப்பு நிவாரண நிதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்தநிலையில், தமிழகத்துக்கு வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுக்களை அனுப்புவது குறித்து உள்துறை அமைச்சகம் இன்று(3-12-2024) ஆலோசனை செய்கிறது. 3 மத்திய குழுக்களை தமிழகத்துக்கு அனுப்புவதற்கு உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.