Rock Fort Times
Online News

அ.தி.மு.க. கொண்டு வந்த காவிரி- குண்டாறு திட்டத்தை தி.மு.க. கிடப்பில் போட்டு விட்டது…

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

திருச்சி பெல் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலையை திறப்பதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று ( 06.07.2023 ) காலை திருச்சி வந்தார். முன்னதாக அவருக்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை மற்றும் பல்வேறு ஜல்லிக்கட்டு அமைப்புகள், மாடுபிடி வீரர்கள், காளை வளர்போர் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் பாராட்டு விழா நடத்தினர்.
இதில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,  சிவபதி, திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட செயலாளா் ப.குமாா் , புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு. பரஞ்சோதி, அமைப்பு செயலாளா் பி.ரத்தினவேல், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் ராஜசேகர், காத்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு அமைப்பினர் மற்றும் விவசாயிகள், எடப்பாடி பழனிசாமிக்கு வீரவாள், கேடயம், மலர் மாலைகள், பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.


பாராட்டுக்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“நானும் விவசாயி என்பதால் உங்களுடன் சேர்ந்து இந்த விழாவில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.  காளை வளர்ப்பதும், காளையை அடக்குவதும் மிகவும் சிரமம். இது கிராமத்தை சேர்ந்த நம்மை போன்ற விவசாயிகளுக்கு தான் தெரியும்.
அ.தி.மு.க. நடத்தவுள்ள மதுரை மாநாடு இலச்சினையில், ஜல்லிக்கட்டு காளையுடன் கூடிய மாடுபிடி வீரரும் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும். புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வறட்சி பாதித்த மாவட்டங்கள் பயன்பெறக் கூடிய வகையில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம், முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டம். அதை எனது தலைமையிலான அரசு அறிவித்து, அதற்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதற்கட்ட பணியையும் துவக்கினோம். தற்போதைய தி.மு.க.அரசு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. அ.தி.மு.க. ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலரும். இத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம். ஆசியாவிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் கால்நடை பூங்காவை சேலம் மாவட்டம் தலைவாசல் அருகில் விருத்தாசலம் கூட்டுரோட்டில் எங்களது ஆட்சியில் நிறுவப்பட்டது. இந்த பூங்காவானது, 1,002 ஏக்கர் பரப்பளவில், 1022 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்க நான் துவக்கி வைத்தேன். விவசாயிகளும், கால்நடைகளும் பலன் பெறும் இத்திட்டத்தையும் தி.மு.க.அரசு கிடப்பில் போட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்