திருச்சியில் அதிநவீன கருவிகளுடன் உருவான காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட்- * அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…!
தென் இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனை குழுமமான காவேரி மருத்துவமனை, திருச்சியில் காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட் என்ற பிரத்யேக புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கியுள்ளது. இதன் திறப்பு விழா இன்று(05-06-2025) நடைபெற்றது. இம்மருத்துவமனையை நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். மேயர் மு.அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவமனை குறித்து காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் டி. செங்குட்டுவன் கூறுகையில்,
இதுவரை பெரிய நகரங்களில் மட்டுமே கிடைத்த அதிநவீன புற்றுநோய் சிகிச்சைகள் இனி திருச்சியிலும் கிடைக்கும். இம்யூனோ தெரபி மற்றும் துல்லிய கீமோதெரபி உட்பட பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்காக 50 படுக்கைகள் கொண்ட ஒரு பகல்நேர சிகிச்சை மையமும் உள்ளது. திருச்சியில் உள்ள காவேரி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள இந்த புதிய மருத்துவமனையில், புற்று நோய்களை கண்டறிய அனைத்து தொழில்நுட்பங்களும் உள்ளன. மேலும் அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை திறம்பட வழங்குவதற்கு அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் உள்ளனர். நகரிலேயே ட்ருபீம் என்னும் மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை அமைப்பு இம்மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. இதன் மூலம் மூளை, நுரையீரல், தலை மற்றும் தொண்டைப் பகுதி போன்ற உறுப்புகளில் உள்ள நுண்ணிய கேன்சர் கட்டிகளையும், குறைந்த பக்க விளைவுகளுடன் குணப்படுத்த முடியும். PET-CT ஸ்கேனர் மற்றும் எண்டோபிரோன் கியல் அல்ட்ராசவுண்ட் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் புற்றுநோய்க்கான அணு மருத்துவத்தையம் அறிமுகப்படுத்த உள்ளோம். குழந்தைப்பருவ புற்றுநோய் மற்றும் இரத்த புற்றுநோய்களுக்கான சிறப்பு நிபுணர்களும் உள்ளனர். இனி அதிநவீன, மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளுக்காக பெரிய நகரங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்றார். காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் அனிஷ் கூறுகையில், “புற்றுநோய் சிகிச்சை முறைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எங்கள் புதிய மருத்துவமனையின் சிறப்பு அனைத்து வகை புற்றுநோய் சிகிச்சைகளையும் வழங்க வலுவான நிபுணர்கள் குழு முழுநேரமும் இருப்பதுதான். ஒவ்வொரு நோயாளிக்கும் சிறந்த, பிரத்யேக சிகிச்சைகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது என்றார்.
*
Comments are closed.