திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகள் பிடிப்பு- மாடுகளின் உரிமையாளர்கள் வாக்குவாதம்…!
திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு, மேற்கு, சித்திரை வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், நேற்று இரவு மாநகராட்சி ஊழியர்கள் சித்திரை வீதிகளில் சுற்றி திரிந்த 4 மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்கள் பிடிக்கப்பட்ட மாடுகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், மாநகராட்சி ஊழியர்கள் மாட்டை திருப்பித் தர ஒப்புக் கொள்ளாததால் ஒரு கட்டத்தில் மாடுகளை ஏற்றிய வாகனத்தை சூழ்ந்து கொண்டு நின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாட்டின் உரிமையாளர்களை எச்சரித்து, இனிமேல் மாடுகளை சாலைகளில் திரிய விடமாட்டோம், அதனை மீறினால் மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவோம் என எழுதிக் கொடுத்துவிட்டு மாடுகளை மீட்டு சென்றனர்.

Comments are closed.