Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ( 07.11.2023 ) ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். பின்னர் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அண்ணாமலையை வரவேற்று திருவானைக்காவல் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினர் பேனர் வைத்திருந்தனர். இந்தநிலையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைத்ததாக பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஸ்ரீரங்கம் மண்டல் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரண்டாவது நாளாக இன்று திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் நிலையில் அக்கட்சியினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்