திருச்சி நவல்பட்டு பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலிதேவி (வயது 31). இவருக்கும், திருச்சி ஐயப்பன் நகரை சேர்ந்த நவீன் குமார் என்பவருக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 28 1/2 சவரன் தங்க நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மேலும் நகை, பணம் கேட்டு அஞ்சலிதேவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஞ்சலிதேவி புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வமலர், அஞ்சலி தேவியின் கணவர் நவீன்குமார் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.