Rock Fort Times
Online News

திருச்சியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை வளைத்த 4 பேர் மீது வழக்கு…!

திருச்சி, தில்லைநகர் 6-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சாம்பசிவம்.இவரது மகள் தனலட்சுமி (வயது 60). இவரது சகோதரர் லட்சுமண மோகன் என்பவருக்கு சொந்தமான காலி இடம் திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பாத்திமா நகர் பகுதியில் உள்ளது. இந்த இடம் 2400 சதுர அடி ஆகும். இதன் மதிப்பு ஒரு கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆள் மாறாட்டம் செய்து இந்த இடத்தின் பத்திரத்தை காணவில்லை என போலியான பெயரில் காவல் நிலையத்தில் புகார் அளித்து சி.எஸ்.ஆர் பெற்று, அதன்மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து இந்த இடத்தை 4 பேர் கொண்ட கும்பல் மோசடி செய்து ஏமாற்றி உள்ளதாக திருச்சி மாநகர குற்ற பிரிவு போலீசில் தனலட்சுமி புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவல்லி நான்கு பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்