Rock Fort Times
Online News

திருச்சி, பிராட்டியூரில் கவனக்குறைவுடன் கட்டடப் பணி- பறிபோனது இருவர் உயிர்! காண்ட்ராக்டர், இன்ஜினியர் மீது பாய்ந்தது வழக்கு!

திருச்சி, பிராட்டியூரில் கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான ஜெபக்கூடம் உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக புனரமைப்பு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடந்து வருகிறது. இதில் கட்டடத்தின் மொட்டை மாடியில் “”ரூஃபிங் ஷெட்” அமைக்கும் பணிக்காக 25 அடி உயரமுள்ள இரும்பு ஏணியை பயன்படுத்தினர். அதை கோபி, பாக்கியராஜ், சிவக்குமார் ஆகியோர் தள்ளிக்கொண்டு சென்றபோது, எதிர்பாராத விதமாக ஏணி சாய்ந்து, மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியில் உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து கோபி, பாக்கியராஜ் இருவரும் உடல்கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து திருச்சி கோர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ஒப்பந்தம் மூலம் நடந்த இந்த பணியில், பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு சாதனங்களான கையுறைகள், தலைக்கவசங்கள், கயிறு உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது..இந்த சம்பவம் தொடர்பாக காண்ட்ராக்டர் நடராஜன், இன்ஜினியர் ரெஜின் மற்றும் ராபின்சன் ஆகிய மூவர் மீது செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்