கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள கோனேரிப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த லாரி ஒன்று திடீரென சாலையோரம் நிறுத்த முயன்ற போது பின்னால் வந்த கார் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ், சேலத்தைச் சேர்ந்த தமிழன்பன், திருப்பூரைச் சேர்ந்த நரேஷ் யஷ்வந்த் என்ற 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் வந்த 5 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர் என்பதும், அவர்கள் திருப்பூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு சென்றபோது விபத்தில் சிக்கிக் கொண்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.