தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, திருச்சி விமான நிலையத்திலிருந்து உலகின் பல நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில கடத்தல் மாஃபியா கும்பல்கள் தொடர்ச்சியாக திருச்சி ஏர்போர்ட்டை மையமாக வைத்து, தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், வந்த பயணிகளை, திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு பயணியை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது, அவர் கொண்டு வந்த ஜுஸரில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. அதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்திவரப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 2.5கிலோ எனவும், அதன் மதிப்பு சுமார் ரூ. 1.83 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கத்தை கடத்திவந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.