அரசு பள்ளிகளில் முகாம் நடப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்பு-அண்ணாமலை…* ஒரு நாளில் படிப்பு பாதித்து விடுமா? -துரைமுருகன்
மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. முகாமுக்காக சில இடங்களில் அரசு பள்ளிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை சுட்டிக் காட்டிய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை,
ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்துக் கெடுக்கிறீர்கள்?” என திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, குமணன் தாங்கலில் உள்ள அரசுப் பள்ளியிலும், முகாம் நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அரசு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் அரசு பள்ளியில் நடைபெறுகிறதே என கேட்கிறீர்கள். ஒரே நாளில், அப்படி எதுவும், பள்ளியில் பாடம் நடந்து விடாது. இதனால் மாணவர்களுக்கு கல்வியில் இடையூறு ஏற்படாது என்று கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு கல்வி ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.